வணக்கம்.. வணக்கம்.. வணக்கம் ...
ப்ளாக் மூலம் பல லட்சம் பேரின் எண்ணங்களுக்கு இணையத்தில் இலவச இடமளித்து அவற்றை உலக மக்களோடு பகிர்ந்துகொள்ள உதவிய கூகிளுக்கு நன்றி தெரிவித்து எனது முதல் பதிவை தொடர்கிறேன்............
இணைய இணைப்பில்லா கணணி உயிர் இல்லா உடல் ஆகிவிட்ட இக்காலத்தில் இணையதளங்களும் , ப்ளாக்குகளும் பஞ்சமில்லாமல் பார்வைக்கு கிடைக்கின்றன. இவ்வாறான தளங்களில் இருந்து நாம் நமக்கு வேண்டிய தகவல்களை பார்வையிடுவதோடு , விரும்பியவனவற்றை நமது கணனியில் சேமித்தும் கொள்கிறோம்.
இவ்வாறு பல இணையதளங்கள் , ப்ளாக்குகள் என தேடித்திரிந்து எனது கணனியில் சேமித்து வைத்திருக்கும் (குறிப்பாக உரை வடிவிலான) தகவல்களை இணையத்தில் சேமிக்கவும் , வாசகர்களாகிய உங்களோடு பகிர்ந்து கொள்ளவும் விரும்பியதன் விளைவே இந்த வலைப்பூ.
அம்மா என்றழைக்காத உயிரில்லையே
அம்மாவை வணங்காது உயர்வில்லையே
நேரில் நின்று பேசும் தெய்வம்
பெற்ற தாயன்றி வேறொன்று ஏது
[அம்மா...]
அபிராமி சிவகாமி கருமாயி மகமாயி
திருக்கோயில் தெய்வங்கள் நீதானம்மா
அன்னைக்கு அன்றாடம் அபிஷேகம் அலங்காரம்
புரிகின்ற சிறு தொண்டன் நாந்தானம்மா
பொருளோடு புகழ் வேண்டும் மகனல்ல தாயே உன்
அருள் வேண்டும் எனக்கென்றும் அது போதுமே
அடுத்திங்கு பிறப்பொன்று அமைந்தாலும் நான் உந்தன்
மகனாகப் பிறக்கின்ற வரம் வேண்டுமே
அதை நீயே தருவாயே
[அம்மா...]
பசும் தங்கம் புது வெள்ளி மாணிக்கம் மணிவைரம்
இவை யாவும் ஒரு தாய்க்கு ஈடாகுமா
விலை மீது விலை வைத்துக் கேட்டாலும் கொடுத்தாலும்
கடை தன்னில் தாயன்பு கிடைக்காதம்மா
ஈரைந்து மாதங்கள் கருவோடு எனைத்தாங்கி
நீ பட்ட பெரும் பாடு அறிவேனம்மா
ஈரேழு ஜென்மங்கள் எடுத்தாலும் உழைத்தாலும்
உனக்கிங்கு நான் பட்ட கடன் தீருமா
உன்னாலே பிறந்தேனே
"வருங்காலத்தில் வெளிவரும் பதிவுகள் வாசகர்கள் ஆகிய உங்களுக்கு பயனளிக்கும் என்ற நம்பிக்கையோடு"
"வருங்காலத்தில் வெளிவரும் பதிவுகள் வாசகர்கள் ஆகிய உங்களுக்கு பயனளிக்கும் என்ற நம்பிக்கையோடு"
No comments:
Post a Comment