நன்றி :- Atchu
பங்குச்சந்தை என்றால் என்ன ? (What is meant by Stock Market?)
பொதுவாக பங்குகளை வாங்கி விற்குமிடமே (டிரேடிங்) பங்குச்சந்தை ஆகும். இங்கு சிறு முதலீட்டாளர்கள், தரகர்கள் முதல் பெரிய முதலீட்டாளர்கள், தரகர்கள் வரை பங்குபெறலாம்.
Prospectus என்றால் என்ன ?
ஒரு நிறுவனம் பங்குகளை வெளியிடும் முன் prospectus தயார் செய்ய வேண்டும். அதில் கீழ் காணும் விவரங்கள் விளக்கப்பட்டிருக்க வேண்டும்,
* வெளியிடப்படும் பங்குகளைப்பற்றிய முழு விவரம். (Details of share)
* திரட்டப்படும் பணத்தின் மூலம் என்ன வியாபாரம் செய்வார்கள்.
* அதன் மூலம் அவர்கள் பெற நினைக்கும் லாபம்.
* லாபத்தை பகிர்ந்து எவ்வளவு பங்குலாபம் தருவார்கள். (What is the dividend?)
* கடந்த காலத்தில் எவ்வளவு பங்குலாபம் கொடுத்திருக்கிறார்கள்.
* போனஸ் பங்குகள் கொடுத்திருக்கிறர்களா? (Bonus share)
சரி அதனால் முதலீட்டாளருக்கு என்ன பயன் என்கிறீர்களா?… சரியான கேள்விதான்…. ஒரு முதலீட்டாளர் எந்த பங்கை வாங்கலாம் என்று முடிவு செய்வதற்கு முன் இவ்வாறான prospectus படித்து தெரிந்து கொள்வது மிக அவசியம். ஒரு நிறுவனத்தின் பங்கை வாங்கினால் நமக்கு லாபம் கிடைக்குமா? , பங்குலாபம் கிடைக்குமா? , போனஸ் பங்குகள் கிடைக்குமா? போன்ற கேள்விகளுக்கு prospectus ஓரளவுக்கு பதில் சொல்லி விடும். கவனம், சில நேரங்களில் நட்டமும் ஏற்படலாம் , அது சந்தையின் நிலவரத்தை பொறுத்து மாறுபடும். Prospectus தயார் செய்வதற்கு சில விதி முறைகள் உள்ளது. இவ்விதி முறைகளை (CSE) வகுத்துள்ளார்கள்.
பங்குச்சந்தை இரண்டு வகைப்படும், அவை (Different types of stock market)
முதன்மை பங்குச்சந்தை (Primary Market)
ஒரு கம்பனி முதன் முதலாக பங்குகளை பொது மக்களுக்கு வெளியிடுமிடம் (Issuing first stocks to public) முதன்மை பங்குச்சந்தை ஆகும். இதற்கு ஐ.பி.ஓ (IPO – Initial Public Offer) என்று பொருள்.
முகப்பு விலை என்றால் என்ன? (What is meant by Face Value?)
IPO என்றால் என்ன என்பதை பார்த்தோம். இதில், ஒரு நிறுவனம் முதன் முதலாக பங்குகளை வெளியிடும்பொழுது அதற்கு முகப்பு விலை ஒன்றை நிர்ணயித்து வெளியிடுவார்கள்.
உதாரணத்திற்கு, (SAS) என்ற நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம் (நினைவில் இருக்கட்டும், இது உதாரணமே !). இந்நிறுவனத்தை நடத்த அவர்களுக்கு பணம் தேவை. அதை திரட்ட புதிய பங்குகளை (Shares) வெளியிடுவார்கள். அவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு முகப்பு விலையை நிர்ணயம் செய்து வெளியிடுவார்கள், ஒரு பங்கின் விலை ருபாய் பத்து (Rs. 10) என்று. அதாவது பத்து பங்குகள் வாங்கினால் நூறு ருபாய். இதை சந்தையில் யார் வேண்டுமானலும் வாங்கிக்கொள்ளலாம். அதென்ன பத்து ருபாய் பங்கு என்று உங்களுக்கு தோன்றுமே !.. அதையும் பார்ப்போம்.
மேலே கூறப்பட்ட SAS என்பது மிகச்சிறிய நிறுவனம். அந்நிறுவனம் பங்குகள் வெளியிடும்பொழுது, ஒரு பங்கின் விலை பத்து ருபாய் என்று சிறிய தொகையை நிர்ணயம் செய்வார்கள். ஏனென்றால் அந்நிறுவனத்தை நம்பி யாரும் அதிக விலை கொடுத்து வாங்க மாட்டார்கள். அது போலதான் நிறைய சிறு நிறுவனங்கள் குறைந்த விலையில் பங்குகளை வெளியிடுவார்கள்.
இரண்டாம் நிலை பங்குச்சந்தை – வெளிச்சந்தை (Secondary Market)
முதன்மை பங்குச்சந்தையில் வாங்கப்பட்ட பங்குகளை விற்பதற்கோ அல்லது வாங்குவதற்கோ வெளிச்சந்தையை அனுக வேண்டும். ஒரு கம்பனி ஐ.பி.ஓ (IPO) முடிந்த பிறகு பங்குச்சந்தையில் பட்டியலிடப்படும் (Will be listed in stock market). அதன் பிறகு அக்கம்பனியின் பங்குகளை முதலீட்டாளர்கள் பங்குச்சந்தையில் விற்க முடியும். இப்பங்கின் நடப்பு விலையை (Current stock value) பொறுத்து மற்றொரு முதலீட்டாளர் வாங்கிக்கொள்ளலாம்.
பங்கு என்றால் என்ன ? (What is meant by stock?)
கம்பனிகள் முகம் தெரியாத பலரை சேர்க்க வெளியிடப்படும் சேர்களுக்கு (shares) பங்கு என்று பொருள்.
பங்குதாரர் என்றால் என்ன ? (Share Holder)
பங்குதாரர்களை சேர்க்க கம்பனிகள் பங்குகள் எனப்படும் சேர்களை வெளியிடுவார்கள். இவ்வாறு வெளியிடப்படும் பங்குக்கு ஒரு குறிப்பிட்ட முகப்பு விலையை (Face Value) நிர்ணயம் செய்வார்கள். இப்பங்கை முகப்பு விலையோ அல்லது அதற்கு மேலோ விலை கொடுத்து வாங்குபவர்கள் பங்குதாரர்கள் ஆவார்.
பங்குச்சந்தை குரு - Warren Buffet
வார்ரேன் , அமெரிக்காவில் உள்ள ஒமகா என்னுமிடத்தில் (Omaha, Nebraska America), 1930, ஆகஸ்ட் மாதம் (August 30th) தேதி பிறந்தார்.
பங்குச் சந்தையின் மிகப்பெரிய முதலீட்டாளர் ஆன இவர், பெர்க்சயர் ஹத்வே (Berkshire Hathaway) கம்பெனியின் சி.இ.ஒ (CEO – Chief Executive Officer) ஆவார்.
வார்ரேன் பங்குச் சந்தையும்: (Warren and Share Market)
பெஞ்சமின் கிரஹாம் (Benjamin Graham) எழுதிய (The Intelligent Investor) என்ற புத்தகத்தை படித்ததில் இருந்து, அவர் வாழ்க்கைப் பாதையே மாறியது. அந்த புத்தகத்தின் மூலம் அவர் தெரிந்து கொண்ட விடயம் “பெரிய நிறுவனங்களிள் முதலீடு செய்வதை விட, வருங்காலத்தில் மிகப்பெரியதாக வரக்கூடிய நிறுவனங்களிள் முதலீடு செய்தால் பங்குச் சந்தையில் லாபம் சம்பாதிக்கலாம்” என்பது தான்.
* 20ஆம் வயதில் தனது எம்.எஸ் பொருளாதாரம் ((MS – Master Of Science in Economics) படிப்பை கொலம்பிய பல்கலைகழகத்தில் ((Columbia University) முடித்த வார்ரேன் சிறிது காலம் பங்கு தரகராக (Stock Broker) வேலை பார்த்தார்.
* 22ஆம் வயதில் சூசன் தாம்ஸன் (Susan Thompson) என்பவரை மணந்தார்.
* 24ஆம் வயதில் பென்சமின் (Benjamin) என்பவரிடம் ஆண்டுக்கு $12,000 சம்பளத்திற்கு வேலைக்கு சேர்ந்தார்.
* 26ஆம் வயதில் தனது சொந்த ஊரான ஒமகா-வுக்கு (Omaha) திரும்பிய வார்ன் பஃப்ட் (Warren Buffet) பார்ட்னர்சிப் லிமிட்டட் (Buffett Partnership Ltd) என்னும் கம்பனியை தொடங்கினார்.
* 29ஆம் வயதில் ஆறு கம்பனிகளை நிர்வகித்தார்.
* 32ஆம் வயதில் தனது அணைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து ஒரே நிறுவனமாக மாற்றினார். (Merged six companies into one)
* பஃப்ட் ஜவுளித் துறையில் (Textile) முதலீடு (Invest) செய்தால் லாபம் சம்பாதிக்கலாம் என கண்டறிந்து, பெர்க்சயர் ஹத்வே (Berkshire Hathaway) என்னும் நிறுவனத்தின் பங்குகளை (Shares) $7.60 க்கு/share வாங்கினார்.
* 35ஆம் வயதில் தொடர்ந்து பெர்க்சயர் நிறுவனத்தின் பங்குகளை வாங்கியதன் முலம், அந்நிறுவனத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். (He has become the chairman of Berkshire Hathaway)
* 36ஆம் வயதில் முதன் முறையாக தனியார் நிறுவனங்களான கோன் அன்டு கோ (Kohn and Co), மற்றும் கோச்சைல்டு-ல் (Hochschild) முதலீடு செய்தார்.
* 43ஆம் வயதில் வாசிங்டன் போஸ்ட் கம்பனியின் (Washington post company) பங்குகளை வாங்கி, அந்நிறுவனதின் நிர்வாக உறுப்பினராக பங்கேற்றுக் கொண்டார்.
* 47ஆம் வயதில் மறைமுகமாக பஃப்பலோ ஈவ்னிங் நியூஸ் (Buffalo Evening News) என்ற கம்பனியை $1.02 billion வாங்கினார்.
* 58ஆம் வயதில் கோக்க-கோலா கம்பனியின்(Coca-Cola company) ஏழு சதவீகித பங்குகளை (7 percentage of shares) பில்லியன் டாலர்களுக்கு (Billion dollars) வாங்கினார். இது பஃப்ட்டுக்கு மிகுந்த லாபம் கொடுத்துக் கொண்டிருக்கும் பங்குகளாக விளங்கியது.
* 69ஆம் வயதில் இவர் Money manager என்று கார்ஜன் குருப்பின் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. (survey by the Carson Group in 20th century)
* 75ஆம் வயதில் தனது பெர்க்சயர் நிறுவனத்தின் 85% பங்குகளை தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு இலவசமாக கொடுத்தார்.இதில் பெரும்பான்மையான பங்குகள் பில் கேட்ஸ் மனைவியின் மெலின்டா கேட்ஸ் பவுண்டேசனுக்கு (Bill and Melinda Gates Foundation) கொடுக்கப்பட்டது.
* 77ஆம் வயதில் உலகின் முதல் பணக்காரர் என்ற பெயர் பெற்றார். (Buffett becomes the richest man in the world)
பங்கு முதலீட்டில் பணம் சம்பாதிக்க சில விதிகள்
பங்குகளில் பணம் சம்பாதிக்க இரண்டே விதிகள் தான் உள்ளதாக Warren Buffett கூறுகிறார். இவர் கூறிய எளிய விதியை எப்பொழுதும் மனதில் நிறுத்தினால் வெற்றி நம் பக்கம் தான். அப்படி என்ன விதி அது?
விதி 1 : நம் பணத்தை எப்பொழுதும் இழந்து விடக் கூடாது.....
விதி 2 : முதல் விதியை மறந்து விடக்கூடாது.....
மிக எளிதான விதி, ஆனால் பின்பற்ற மிகவும் கடினமான ஒன்று.

முதலீடு செய்யும் பணத்தை மிகத் தெளிவாக ஆராய்ந்த பின்பே முதலீடு செய்ய வேண்டும் என்பது எல்லோரும் சொல்வது தான். ஆனால் எப்படி ஆராய்வது என்பது தான் கடினமான ஒன்று.
பலர் பல வழிகளை கையாண்டுள்ளனர். வெற்றியும் பெற்றுள்ளனர். பலர் அதைப் பின்பற்ற முயன்று தோல்வியும் கண்டுள்ளனர். அவரவர்க்கு ஏற்ற முறைகளை, நம் உள்மனது சொல்வதை ஏற்று முதலீடு செய்யும் பொழுது பலன் நிச்சயம் கிடைக்கும்.
வார்ரேன் மிகக் குறைந்த விலையுள்ள பங்குகளை, ஆனால் மிகப் பலமான அடித்தளம் உள்ள நிறுவனங்களின் பங்குகளை, அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு (Market Captitalization) குறைவாக இருக்கும் பொழுது தான் வாங்குவார்.
உதாரணமாக 10 Billion மதிப்புள்ள ஒரு நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 Billion இருந்தால், அந்தப் பங்குகளின் விலை மிகவும் குறைவாக இருப்பதாகத் தானே பொருள் (Undervalued Stocks). அந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு நிச்சயம் பத்து Billion எட்ட வேண்டும். குறைந்தது அதன் மதிப்பை எட்டி விடும் தூரத்தில் நெருங்கும். அந்தப் பங்குகளில் பணத்தை முதலீடு செய்தால் பணம் பெருகும் என்றார் வாரன் பப்பட். இதைத் தான் Value Investing என்று சொல்வார்கள். இதில் பல கணக்குகள் உள்ளன. அந்த நிறுவனங்களின் நிதி அறிக்கைகளை ஆய்வு செய்தல், பங்குகளின் கடந்த கால செயல்பாடுகளை ஆராய்தல் என நிறைய கட்டங்களை கடந்த பிறகே முதலீடு செய்ய வேண்டும்.
இந்த முறையில்வார்ரேன் அடைந்த குறிப்பிடத்தகுந்த வெற்றி, அவர் .com நிறுவனங்களில் முதலீடு செய்யவேயில்லை. அந்த நிறுவனங்களின் அடித்தளம் சரியில்லை என்று கருதினார். அந்தக் கருத்தும் நிருபிக்கப்பட்டுவிட்டது
சிலர் பங்குக் குறியீடுகளில் உள்ள பங்குகளில் மட்டுமே முதலீடு செய்வார்கள். சிறந்த நிறுவனங்களின் பங்குகள் மட்டும் தான் பங்குக் குறியீட்டில் இடம் பெறும் என்பதால் நம்முடைய முதலீடு பெரிய அளவில் சரிந்து போகக் கூடிய வாய்ப்புகள் இல்லை.
அதைப் போலவே நமக்கு நன்கு அறிந்த துறைகளில் முதலீடு செய்வதன் மூலம் நம்முடைய முதலீடு எந்தப் போக்கில் செல்லக் கூடும் என்று நம்மால் கண்டுகொள்ள முடியும்.
மென்பொருள் துறையில் உள்ளவர்கள் Pharmaceutical பங்குகளை வாங்குகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். கடந்த மாதம் பல மருந்துகளின் புரியாத பெயர்களைச் சொல்லி, இந்த மருந்துகளின் சந்தை விலை, அதன் தயாரிப்புச் செலவை விட மிக அதிகமாக இருப்பதாகவும், சாதாரண மக்களின் பாரத்தை குறைக்கும் பொருட்டு இதன் விலையைக் குறைக்க அரசு முயற்சி செய்யும் என்றும் அறிவிப்பு வெளியாகியது.
மென்பொருள் துறையில் உள்ளவர்கள், தாம் பங்குகள் வாங்கிய நிறுவனம், அந்த மருந்துகளை தயாரிக்கிறதா எனத் தெரிந்து கொள்வதற்குள் பங்குகள் விலை சரிந்துப் போயிருக்கும். ஆனால் அந்தத் துறையில் உள்ள ஒருவர் மிகச் சுலபமாக அதனை அறிந்திருப்பார். அதற்கேற்ப பங்குகளை விற்றிருப்பார்.
பங்கு வர்த்தகத்தில் எளிய பல வழிகளை பல வல்லுனர்கள் கூறியிருக்கிறார்கள். நாமாக சென்று பணத்தை இழந்து, அனுபவ பாடம் கற்பதை விட இந்த விதிகளைப் பின்பற்றலாம்.
பங்கு தரகர்கள் ? (Stock Brokers)
பங்குச்சந்தையின் உறுப்பினர்களே பங்குத்தரகர்கள் ஆவர். இவர்கள் மட்டுமே, பங்குகளை வாங்க/விற்க (Buy/Sell) நினைக்கும் தனிநபர் அல்லது நிறுவனம் சார்பாக டிரேடிங் (Trading) செய்ய முடியும். இதனால் பங்குகளை வாங்க நினைக்கும் ஒருவர் பங்குதரகரை அனுக வேண்டும். இதற்காக முதலீட்டாளர் பங்குதரகரிடம் ஒரு கணக்கை தொடங்க வேண்டும்.
அலாட்மெண்ட் என்றால் என்ன? (What is meant by Allotment?)
உதாரணத்திற்கு ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) ஆயிரம் மில்லியன் ருபாய்க்கு பங்குகள் வெளியிடுகிறார்கள் (Issues stocks) என்று வைத்துக்கொள்வோம். அவ்வாறான செய்தி வெளியானதும், பங்குகளை (shares) வாங்க நிறைய பேர் விண்ணப்பம் செய்வார்கள். சிலர் நூறு பங்குகள் வேண்டியும், சிலர் ஆயிரம் பங்குகள் வேண்டியும் விண்ணப்பங்கள் வந்து குவியும். அதுவும் ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் (JKH) போன்ற பெரிய நிறுவனம் என்றால் சொல்லவா வேண்டும்.
அப்படி கோரப்பட்ட பங்குகளின் மதிப்பு ஆயிரம் மில்லியன் மேல் குவிந்துள்ளது என்றால் பங்குகளை அலாட்மெண்ட் முறையில் ஒதுக்குவார்கள். ஆதாவது ஒருவர் நூறு பங்குகள் கோரினால் நூறுமே கிடைக்காது, ஐம்பது கிடைக்கலாம், இருபது பங்குகள் கிடைக்கலாம். ஏன் சில நேரங்களில் கிடைக்காமலே கூட போகலாம். இவ்வாறு ஒதுக்கப்படும் பங்குகளை அலாட்மெண்ட் என்பார்கள்.
என் நண்பர் 2005 இல் வெளியான டயலாக் (Dialog Telekom) பங்குகளை வாங்க விண்ணப்பம் செய்தார்.அவரைப்போல நிறைய பேர் ஆர்வமாக விண்ணப்பித்தார்கள். இறுதியில் டயலாக் பங்குகள் அவருக்கு
கிடைக்கவில்லை.
வித்-பிரிமியம் என்றால் என்ன ? (What is meant by With-Premium?)
உதாரணத்திற்கு ஜான் கீல்ஸ் ஹோல்டிங்ஸ்(JKH) நிறுவனத்தை எடுத்துக்கொள்வோம். அவர்கள் சந்தையில் மிகப்பெரிய நிறுவனம். அது மட்டுமல்ல லாபம் கொழிக்கும் நிறுவனம் என்று சொன்னால் மிகையாகாது. அப்படிபட்ட நிறுவனம் புதிய பங்குகளை வெளியிடுகிறார்கள் என்றால் அதற்கு ஏகப்பட்ட கிராக்கி உண்டு. நீ-நான் என்று போட்டி போட்டு கொண்டு வாங்குவார்கள். அவ்வாறான நிறுவனங்கள் பத்து ருபாய் பங்குக்கு நூறு ருபாய் அதிக விலை (Rs. 100 more) வைத்து விற்பார்கள். அதாவது நூற்றிபத்து ருபாய் (Rs 10+100=110) என்று. இதை வித்-பிரிமியம் (With-Premium) என்பார்கள்.
பங்குச்சந்தையில் ஓவர்-சப்ஸ்கிரைப்டு என்றால் என்ன? (What is meant by over subscribed?)
உதாரணமாக ஹட்டன் நேஷனல் பேங்க் (Hatton National Bank -H.NB) நிறுவனம் ஐந்தாயிரம் மில்லியன் ருபாய்க்கு பங்குகள்(Issues stock)வெளியிடுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். H.N.B சந்தையில் மிகப்பெரிய நிறுவனமாகும்.அப்படியொரு நிறுவனம் புதிய பங்குகள் வெளியிடுகிறார்கள் என்றால் அதை வாங்க ஏகப்பட்ட கிராக்கி ஏற்படும். நீ நான் என்று நிறையபேர் போட்டிப் போட்டுக்கொண்டு வாங்க விண்ணப்பிப்பார்கள். இப்பொழுது ஐந்தாயிரம் மில்லியன் ருபாய்க்கு பங்குகள் வெளியிட்ட H.N.B க்கு ஒன்பாதாயிரம் மில்லியன் ருபாய்க்கு பங்குகள்கோரப்பட்டு விண்ணப்பங்கள் வந்து குவிந்துள்ளது என்றால் அதை ஓவர் சப்ஸ்கிரைப்டு (Over subscribed) என்பார்கள்.
அது எப்படி என்கிறீர்களா?........ இப்படிப்பட்ட பெரிய லாபம்கொழிக்கும் நிறுவனங்கள் புதிய பங்குகள் வெளியிடுகிறார்கள் என்றால் சும்மாவா? நிறைய பேர் விண்ணப்பம் செய்வார்கள் இப்படிபட்ட உண்மையான சம்பவங்கள் ஏராளம்.
அன்டர் சப்ஸ்கிரைப்டு என்றால் என்ன ? (What is meant by Under-subscribed?)
ஒரு நிறுவனம் புதிய பங்குகளை (Issue stocks) வெளியிடும் பொழுது, அதற்கு முதலீட்டாளர்களின் போதிய வரவேற்பில்லாமல் ஒரு குறிப்பிட்ட சதவீதத்திற்கு (percentage) பங்குகள் கோரப்பட வில்லை என்றால், அதனை அன்டர் சப்ஸ்கிரைப்டு (Under subscribed) என்பார்கள். C.S.E விதிமுறைப்படி, அவ்வாறான பங்கு வெளியீட்டை ரத்து (Cancel) செய்துவிட்டு, முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பிக்கொடுக்க வேண்டும்.
பங்குச்சந்தையின் போக்கை பொறுத்து, சந்தையை இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.
1- புல் மார்க்கெட் (BULL Market)
2- பேர் மார்க்கெட் (Bear Market)
புல் மார்க்கெட் என்றால் என்ன ? (What is meant by BULL market?)
BULL மார்க்கெட் (புல் மார்க்கெட்) என்றால், பங்கு வர்த்தகம் நல்ல லாபகரமாக உள்ள சூழ்நிலையை குறிக்கும்.பங்குக் குறியீடுகள் உயர்வதும், பங்கு விலைகள் உயர்ந்து கொண்டே இருப்பதும் காளைச்சந்தையில் தான்.
பொதுவாக கீழே விளக்கப்பட்ட காரணங்களால் பங்குச்சந்தை புல் மார்க்கெட் நிலையை அடையும்.
1-பங்குகளின் விலை உயர்வு. (Increase in stock prices)
2-பொருளாதார முன்னேற்றம் (Increase in economic growth)
3-அதிக முதலீடுகள் (More Investor confidence)
பேர் மார்க்கெட் என்றால் என்ன ? (What is meant by BEAR market?)
பேர் மார்க்கெட் என்பது புல் மார்க்கெட்கு எதிர்மறை ஆனது. (Bear market is opposite to Bull market) பங்குக் குறியீடுகள் வீழ்ச்சி அடைவதையும், பங்கு விலைகள் சரிவடைவதையும் கரடிச் சந்தை என்று சொல்வார்கள். கரடிச் சந்தையை விட்டு முழுதாக விலகாமல் நல்ல நிறுவன பங்குகளை குறைந்த விலைக்கு வாங்கிப் போடுவது நல்லது.
பொதுவாக கீழே விளக்கப்பட்ட காரணங்களால் பங்குச்சந்தை பேர் மார்க்கெட் நிலையை அடையும்.
1-பொருளாதார பின்னடைவு (Downfall in economic growth)
2-ஒரு கம்பனியோ, செக்டரோ, மார்கெட்டோ சரிவை சந்திக்கும் என்னும் எண்ணத்தில் முதலீட்டாளர்கள் பங்குகளை விற்றுவிடுவது. (if the investor belives market in go down)
போன்றவற்றின் காரணமாக பங்குச்சந்தை சரிய தொடங்கும், இதை பேர் மார்க்கெட் என்பார்கள்.
பன்றி என்பது ?
பங்குச் சந்தையைப் பற்றி நன்கு தெரிந்தவர்கள், காளைச் சந்தையிலும் பணம் பார்க்கலாம், கரடிச் சந்தையிலும் பணம் பார்க்கலாம். ஆனால் பங்குச் சந்தைப் பற்றித் தெரியாமல் மனம் போன போக்கில் அடுத்தவர் பேச்சைக் கேட்டு முதலீடு செய்துவிட்டுப் பிறகு லபோ திபோ என அடித்துக்கொள்பவர்கள் பன்றிகளைப் போன்றவர்கள். அவர்கள் பங்குச் சந்தையில் மோசமாக செத்துப் போவார்களாம்.
“Bulls make money, bears make money, but pigs just get slaughtered!”
பங்கு வர்த்தகம் சூதாட்டமா ?
பல நேரங்களில், சந்தையின் போக்குப் பற்றி புரிபடாமல் போகும் பொழுது பங்கு வர்த்தகத்தை சூதாட்டம் என்று சொல்கிறார்கள். சந்தையைப் பற்றி அறியாதவர்களுக்குத் தான் அதன் போக்கு புரிபடாமல் போகும். பங்குச் சந்தை சூதாட்டமாக தெரியும்.
சீட்டுக்கட்டு போன்ற ஒரு சூதாட்டத்தில் கூட சீட்டுக்கட்டுப் பற்றி அதிகம் தெரியாதவர்களால் அதில் வெற்றி பெற்று விட முடியுமா என்ன ? அதில் வெற்றி பெறக் கூட சீட்டுக்கட்டுப் பற்றி தெரிந்திருக்க வேண்டும்.
சீட்டுக்கட்டு விளையாடும் பொழுது, நமக்கு வரும் சீட்டில் ஜோக்கர் உள்ளதா, ரம்மி சேருமா என்று முதலில் சோதிப்போம். ரம்மி சேரக்கூடிய வாய்ப்பு இருந்தால் மட்டுமே விளையாடுவோம். இங்குமங்குமாக பல எண்கள் இருந்தால் சீட்டைக் கீழே வைத்து விட்டு, அதற்கு தரப்படும் 20புள்ளிகளை சந்தோசமாக வாங்கிக் கொண்டு, நம் பக்கத்தில் இருப்பவர் முழுப் புள்ளிகளும் வாங்க வேண்டுமென வேண்டிக் கொள்வோம். சீட்டுக் கட்டில் ஜோக்கர் இருந்து ரம்மி சேரும் வாய்ப்பு இருந்தால் மேற்கொண்டு விளையாடுவோம். விளையாட ஆரம்பித்து நம்முடைய எதிர்பார்ப்புக்கு மாறாக நடந்தால் பாதியிலேயே விலகிக் கொண்டு அதனால் கிடைக்கும் குறைந்தப் புள்ளிகளை பெற்றுக் கொண்டு, 80ல் இருந்து தப்பித்து, கூடிய வரையில் ஆட்டத்தில் இருந்து வெளியேறி விடாமல் நம்மை பாதுகாத்துக் கொள்வோம். அது மட்டுமின்றி எதிராளி எந்த சீட்டுகளை எடுக்கிறார் என்பதைக் கொண்டு அவர்களுக்கு ரம்மி சேர்ந்து விடாதவாறு சீட்டுகளை இறக்குவோம். இது போன்ற பல நுட்பங்களைக் கையாண்டால் தான் வெற்றி பெற இயலும்.
சீட்டுக்கட்டுப் பற்றி ஒன்றுமே தெரியாதவர்களால் இவ்வாறு விளையாடமுடியுமா ? முதலில் தன்னிடம் இருக்கின்ற சீட்டுகளைக் கொண்டு விளையாடலாமா, வேண்டாமா என்று அவர்களால் முடிவு செய்ய இயலாது. பல நேரங்களில் விளையாடி தான் பார்ப்போமே என்று விளையாடுவார்கள். ரம்மி சேரா விட்டால் விலகி விடலாம். ஆனால், சேர்ந்து விடும் என்ற எண்ணத்திலேயே விளையாடிக் கொண்டிருப்பார்கள். பிறகு முழுப்புள்ளிகள் கிடைக்கும் பொழுது நொந்து போவார்கள். அற்புதமான சீட்டுகளே கிடைத்தாலும், அடுத்தவர்கள் சீட்டுகளை இறக்குவதை கணித்து ஆடினால் தான் வெற்றி பெற இயலும். இல்லாவிட்டால் தோல்வி தான்.
சீட்டுக்கட்டுப் போன்ற சூதாட்டங்களுக்கே இவ்வளவு நுணுக்கங்கள் தேவைப்படுகிறது.
விளையாட்டு முதல் தொழில் வரை ஒரு துறையைப் பற்றி நன்கு தெரிந்தால் தான் அதில் வெற்றி பெற முடியும்.நம்மில் சிலர் கிரிக்கெட் விளையாடி இருப்போம். எந்தப் பந்து வந்தால் எப்படி அடிப்பது என்பதெல்லாம் நமக்கு தெரியாது. பந்து வந்தால் ஓங்கி ஒரே அடி. சில நேரம் பந்து பறக்கும். சில நேரங்களில் நம்முடைய ஸ்டெம்ப் பறந்து போகும். பிறகு தான் இந்தப் பந்தை தடுத்து ஆடி இருக்கலாமோ என்று தோன்றும். அடுத்த முறை அதை செயல் படுத்துவோம்.
பங்குச் சந்தைக்கும் அந்த நுணுக்கம் தேவைப்படுகிறது. பங்குச் சந்தைப் பற்றி ஒன்றும் தெரியாமல் பணம் இருந்தால் போதுமென முடிவு செய்து களத்தில் இறங்கி விடுவதால் தான் பல நேரங்களில் இழப்பு ஏற்படுகிறது. நமக்கு இழப்பு ஏற்படும் பொழுது தான் பங்குச் சந்தை சூதாட்டமாக தெரிகிறது.
MARGIN TRADING - சக நண்பரின் அனுபவம்
பங்குச் சந்தையில் நான் முதலில் Margin Trading ல் இருந்து தான் ஆரம்பித்தேன். ஒரே நாளில் பங்குகளை வாங்கி விற்று விடுவது தான் மார்ஜின் டிரேடிங். நான் செய்த முதல் வர்த்தகத்திலேயே, அரை மணி நேரத்தில் 1000 ரூபாய் லாபம். அடுத்தடுத்த நாட்களில் நான் செய்த சில வர்த்தகங்களும் லாபத்தில் தான் முடிவடைந்தது. கொஞ்ச நாள் என் கால் தரையில் படவே இல்லை. காற்றில் மிதந்து கொண்டே இருப்பேன். நமக்கு பங்குச் சந்தையின் நுணுக்கம் தெரிந்து விட்டது என்றே முடிவு செய்தேன். ஒரு நாள் என்னுடைய தரகர், ஒரு சிமெண்ட் நிறுவனம் இன்று லாபகரமாக இருக்குமென்றார். பேராசை யாரை விட்டது. நமக்கு எல்லாம் தெரிந்து விட்டது என்ற முடிவில், இது வரை 50, 100 என்று குறைந்த எண்ணிக்கையிலேயே பங்குகளை வாங்கி வந்த நான் அன்று 500 பங்குகளை வாங்கினேன். என்னுடைய மொத்த Exposure limit க்கு பங்குகளை வாங்கி விட்டேன்.
நான் எப்பொழுதும் இன்போசிஸ், சத்யம், விப்ரோ போன்ற எனக்கு தெரிந்த மென்பொருள் பங்குகளில் தான் வர்த்தகம் செய்து கொண்டிருந்தேன். ஆனால் பேராசை, தரகரின் டிப்ஸ் நம்பி என்னை சிமெண்ட் பக்கம் இழுத்துச் சென்றது. அன்று பார்த்து சிமெண்ட் பங்குகள் சரியத் தொடங்கின. சரி, எப்படியும் விலை ஏறும் என்று எதிர்பார்த்து காத்திருந்து விட்டு நான் விற்ற பொழுது, இது வரைப் பெற்ற லாபம் அனைத்தும் காணாமல் போனது மட்டுமில்லாமல், நட்டமும் ஏற்பட்டது. பங்குச் சந்தை சரியான சூதாட்டம் என்று முடிவு செய்து கொஞ்ச நாள் சந்தையில் இருந்து ஓடி விட்டேன்.
மார்ஜின் டிரேடிங்கை எல்லா நேரங்களிலும் லாபமுடன் செய்ய முடியாது. அதில் ரிஸ்க அதிகம். பங்கு விலை எகிறும் என நீண்ட கால முதலீட்டில் காத்திருக்கலாம். ஆனால் சில மணித்துளிகளில், சரிந்த பங்கு மறுபடியும் எகிறும் என காத்திருக்க முடியாது. சந்தை சூழ்நிலையைப் பொறுத்து எகிறலாம். அல்லது இன்னும் சரியலாம். நான் பங்கு எகிறும் எனக் காத்திருக்க, பணம் காணாமல் போய் விட்டது. பங்கு முதலீட்டுக்கும், ஸ்பேக்குலேஷனுக்கும்( Speculation )வித்தியாசம் தெரியாமல், முதலீட்டாளர் மன நிலையில் ஸ்பேக்குலேட் செய்து கொண்டிருந்தது தான் நான் செய்த தவறு. நம்முடைய மனநிலைக்கு ஏற்றவாறு தான் வர்த்தகம் செய்ய வேண்டும். டிராவிடால் ஷேவாக் போல் ஆட முடியுமா என்ன ? அவரவர் பலத்திற்கு ஏற்றவாறு தான் ஆட வேண்டும். அப்பொழுது தான் வெற்றி பெற இயலும். முதலீட்டிற்கும் இது பொருந்தும்.
அடுத்து, நம்முடைய தரகு நிறுவனங்கள் கொடுக்கும் டிப்சை முற்றும் முழுதாக நம்புவதும் வீழ்ச்சிக்கு வழி வகுக்கும். முதலில் எனக்கு தெரிந்த துறையில் வர்த்தகம் செய்த நான், எனக்கு ஒன்றுமே தெரியாத சிமெண்ட் துறையில் தரகர் சொன்னார் என்று வாங்கியதால் தானே நட்டம் ஏற்பட்டது. முதலீட்டில் ஆராய்வது முக்கியம். தெரியாத துறையில் கால் வைக்க கூடாது.
பங்கு வர்த்தகத்தில் முதலீடு செய்வது ஒன்றும் கடினமானது அன்று. ஆனால் சில நெறிமுறைகளை கையாள வேண்டும். எனக்கு உகந்த ஒரு வர்த்தக முறை மற்றவருக்கு பொருத்தமாக இருக்காது. நமக்கு உகந்த முறையைக் கையாளுவதே சிறந்தது. சாலைகளில் பைக்கில் சிலர் பல வித்தைகள் காட்டுவார்கள். வேகமாக பறப்பார்கள். இதையெல்லாம் செய்து பழக்கமில்லாத நாம் அவர்கள் செய்கிறார்களே என்று வித்தைகள் செய்தால் என்னாகும் ? உடம்பு புண்ணாகி போகும். நாம் பல நேரங்களில் நமக்கு உகந்த ஒன்றையே செய்கிறோம். முதலீட்டிலும் அதையே செய்ய வேண்டும்.
பங்கு வர்த்தகத்தில் பல முறைகள் இருக்கின்றது. சிலர் அவ்வப்பொழுது பங்குகளை விற்று லாபம் பார்ப்பார்கள். சிலர் நீண்ட கால முதலீடு செய்வதே நல்லது என்று முடிவு செய்வர்கள். நமக்கு லாபம் தரும் ஒரு முறையை நமது மனநிலைக்கு ஏற்றவாறு தேர்ந்தெடுத்து பின்பற்ற வேண்டும். அடுத்தவர்களுக்கு இது தவறாக கூட தெரியலாம். அதனைப் பற்றி நாம் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. எதுவும் இங்கு விதிமுறையாகாது.
பங்குச் சந்தைப் பற்றி அறிந்து வர்த்தகம் செய்யும் பொழுது தான் அது ஒன்றும் சூதாட்டம் இல்லை, அதன் உயர்வுக்கும் அர்த்தமுள்ளது, சரிவுக்கும் காரணமுள்ளது என்று புரிபடும் அந்த சரிவுகளிலும் கூட நம் பணத்தை பாதுகாத்து, பெருக்கிக் கொள்ள முடியும் என்பதும் புரிபடும்.
நன்றி...
விமர்சனமே வெற்றிக்கு வித்து ... [ விமர்சனங்கள் விரும்பப்படுகின்றது .. ]

very very useful.thank you
ReplyDeletegd
DeleteThank you very much bro...thank you for being with us...
DeleteThis comment has been removed by the author.
ReplyDelete